Posts

Thiruppugazh - Arunagirinathar - Prayer Songs in Tamil for Health

Image
 உடல் ஆரோக்கியம் பேண உதவும் திருப்புகழ் பாடல்கள் நம்முடைய மனத்தில் நின்று அதனை வழிநடத்தும் ஈசுவரனே விநாயகர். இறைவனை எந்த ரூபத்தில் வழிபட்டாலும், விநாயகருடைய கருணையினாலேயே நம்முடைய புத்தி தெளிவடைந்து மனம் ஆரோக்கியத்துடன் விளங்குகிறது. நம்முடைய உடலில் நின்று அதனை வழிநடத்தும் ஈசுவரனே முருகன். இறைவனை எந்த ரூபத்தில் வழிபட்டாலும், முருகனுடைய கருணையினாலேயே நம்முடைய புலன்கள் கூர்மையடைந்து தேஹம் ஆரோக்கியத்துடன் விளங்குகிறது.   ஆகவே, நம் மனத்தையும் உடலையும் ஆரோக்கியத்துடன் பேணுவதற்கு இவர்களை வணங்குவதை விட சிறந்த வழி வேறு என்ன இருக்கமுடியும்? அப்படி வணங்குவதற்கு அருணகிரிநாதரின் திருப்புகழை விடச் சிறந்த வேறு பக்திநூல் என்ன இருக்க முடியும்? தன் உடம்பின் ஆரோக்கியக் குறைவினால் மனம் நொந்து தன் உயிரை மாய்த்துக்கொள்ளத் துணிந்து, பின், முருகப் பெருமானால் தடுத்தாட்கொள்ளப்பட்டு, திருப்புகழைப் பாடிப் பாடியே முழு ஆரோக்கியம் பெற்றவர் அல்லவா, அருணகிரிநாதர்? சந்தநயத்தோடு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழிலிருந்து, கௌமாரம் குழுவினரால் மிக அழகாகப் பாடப்பட்ட, மூன்று முக்கியமான பாசுரங்கள் இங்கு தரப்பட்டுள்ளன...